எதிரியின் பலத்தை பற்றி சிறிது தெரிந்து கொள்வோம்; சீனாவின் பலிஸ்டிக் ஏவுகணைகள் வரிசை குறித்த பார்வை !!

  • Tamil Defense
  • June 12, 2020
  • Comments Off on எதிரியின் பலத்தை பற்றி சிறிது தெரிந்து கொள்வோம்; சீனாவின் பலிஸ்டிக் ஏவுகணைகள் வரிசை குறித்த பார்வை !!

டி.எஃப் 10ஏ :
1500கிமீ தாக்குதல் வரம்பை கொண்ட இது 500கிலோ எடையிலான வழக்கமான வெடிபோருள் அல்லது அணு அயுதத்தை சுமக்க வல்லது. இதனை கப்பல், விமானம் மற்றும் நீர்மூழ்கிகளில் இருந்து ஏவ முடியும்.

டி.எஃப் 16:
இந்த ஏவுகணைகள் 1000கிலோமீட்டர் வரை தாக்குதல் வரம்பை கொண்டுள்ளன. 500 முதல் 1000கிலோ வரையிலான வழக்கமான வெடிபோருள், அணு ஆயுதங்கள், க்ளஸ்டர் குண்டுகளை சுமக்க வல்லது. ஒன்றுக்கும் மேற்பட்ட குண்டுகளையும் சுமக்கும் வசதியை கொண்டது.

டி.எஃப் 21டி:
இந்த ஏவுகணைகள் 1700கிலோமீட்டர் தாக்குதல் வரம்பை கொண்டுள்ளன. 600கிலோ வழக்கமான வெடிபோருள் அல்லது 200,300,500 கிலோடன் அளவிலான அணு ஆயுதத்தை சுமக்கும்.

டி.எஃப்100:

இது 1500கிலோமீட்டர் செல்லக்கூடிய க்ருஸ் ஏவுகணை என்று சொல்லப்படுகிறது. இதன் பிரதான பயன்பாட்டு நோக்கம் விமானந்தாங்கி கப்பல்களை தாக்கி அழிப்பதாகும்.

டி.எஃப்17:
இது ஒரு ஹைப்பர்சானிக் மிதவை வாகனம் ஆகும். மாக்5 முதல் மாக்10 வரையிலான வேகத்தில் செல்லக்கூடிய திறன் கொண்டது. இதில் வழக்கமான க்ருஸ் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் இணைத்து ஏவ முடியும். இதன்மூலம் அவற்றின் தாக்குதல் வரம்பும் பலமடங்கு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

டி.எஃப் 31ஏஜி:

இது டி.எஃப்31 ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட வடிவமாகும். இந்த ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் பாயும் வகையை சேர்ந்தது. இதன் தாக்குதல் வரம்பு 11000 கிலோமீட்டர்களுக்கும் அதிகமானதாகும். மேலும் பழைய டி.எஃப்31 ஒரே ஒரு குண்டை மட்டும் சுமக்க கூடியது ஆனால் இந்த ஏவுகணையில் பல குண்டுகளை வைத்து ஏவ முடியும். முறையே 20,90 அல்லது 150 கிலோடன்கள் அளவிலான மூன்று அணு ஆயுதங்களை வைத்து ஏவ முடியும்.
உலகின் அதிபயங்கர ஆயுதங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

டி.எஃப் 41:

இது தான் உலகிலேயே மிகப்பெரிய தாக்குதல் வரம்பை கொண்டுள்ள ஏவுகணை அதாவது சுமார் 15,000 கிலோமீட்டர். 20,90 அல்லது 150 கிலோடன் அளவிலான 10 முதல் 12 அணு ஆயுதங்கள் வரை சுமக்க கூடியது. அதே நேரத்தில் ஒரே ஒரு 1 மெகாடன் அளவிலான அணு அயுதத்தையும் சுமக்க வல்லது.

சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கான தொலைவு 11,600கிலோமீட்டர் அதனையே வெறும் 30 நிமிடத்தில் கடக்கும் ஆற்றல் கொண்டது என கூறப்படுகிறது.

சீனாவிடம் இன்னும் பல குறுந்தூர மற்றும் இடைதூர பலிஸ்டிக் ஏவுகணைகள் உள்ளது ஆனால் மேற்குறிப்பிட்டவை பிரதானமானவை ஆகும்.