
நேற்று ஷோபியான் என்கவுன்டருக்கு பிறகு அவந்திபோராவில் செய்தியாளர்களை 15ஆவது கோர் தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் பி.எஸ். ராஜூ சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் “370ஆவது சிறப்பு சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை காஷ்மீர் மகாகள் பாஸிட்டிவ் ஆக எடுத்து கொண்டுள்ளனர், கடந்த காலங்களை விட தற்போது அதிகப்படியான அமைதி நிலவி வருவதே இதற்கு சாட்சி என்றார்.
மேலும் கூறுகையில் படிப்படியாக காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வருவதாகவும் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், சுற்றுலா துவங்கி உள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் இத்தகைய அமைதியான சூழல் காஷ்மீரில் நிலவுவதை பாகிஸ்தானால் சகித்து கொள்ள முடியவில்லை, தொடர்ந்து காஷ்மீரை கொதி நிலையில் வைத்திருக்கவே பாக் விரும்புவதாகவும் அதற்காக காஷ்மீர் மக்களை பொய் தகவல்கள் மூலமாக திசைதிருப்ப முயல்வதாகவும் , ஆகவே காஷ்மீர் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் இந்த தேசத்தின் 125கோடி மக்களுக்கும் இதில் பங்கு உண்டு எனவும் கூறினார்.
லெஃப்டினன்ட் ஜெனரல் ராஜூ அவர்களுடன், ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் பிரிவுடைய விக்டர் ஃபோர்ஸ் தளபதி மேஜர் ஜெனரல் செங்குப்தா அவர்களும், மத்திய ரிசர்வ் காவல்படை ஐஜி ஒருவரும் உடனிருந்தனர்.