
சீனாவின் அடாவடித்தனம் உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இந்தியாவுடனான எல்லையில் மோதலில் சீனா ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
அதை போலவே தென் சீன கடல் பகுதியிலும், ஜப்பானின் சென்காகு தீவுகளிலும், தைவானுடனும் சீனா எல்லை பிரச்சினை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஜப்பான் இதன் காரணமாக சீனாவை நோக்கி ஏவுகணைகளை நிலைநிறுத்தியுள்ளது. மேலும் ராணுவ பலத்தை அதிகரித்து கொண்டே வருகிறது.
மேலும் வான் பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறது. ஜூன் மாத இறுதிக்குள் நான்கு ராணுவ தளங்களில் பேட்ரியாட் – பேக்3 எம்.எஸ்.இ வான் பாதுகாப்பு அமைப்புகளை நிலைநிறுத்தி செயல்பாட்டுக்கு கொண்டு வர உள்ளது.
ஏற்கனவே ஜப்பானில் சேவையில் உள்ள பேட்ரியாட் பேக்3 ஏவுகணை 70கிமீ தாக்குதல் வரம்பை கொண்டது ஆனால் இந்த புதிய பேக்-3 எம்.எஸ்.இ 100கிமீ தாக்குதல் வரம்பை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது மிகவும் நவீனத்துவம் கொண்டது , க்ருஸ் ஏவுகணைகள், பலிஸ்டிக் ஏவுகணைகள், போர் விமானங்கள் ஆகியவற்றை முன்கூட்டியே அறிந்து தாக்கி அழிக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.