14 இந்தோ திபெத் காவல்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி !!

  • Tamil Defense
  • June 21, 2020
  • Comments Off on 14 இந்தோ திபெத் காவல்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி !!

இந்திய சீன எல்லை பகுதியை காவல் காக்கும் துணை ராணுவ படையான இந்தோ திபெத் காவல்படை நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

தற்போது கொரோனா தொற்று பரவல் இந்தியாவில் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இந்த படையும் அதனால் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 14 வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், தற்போது ஒட்டுமொத்தமாக 58 வீரர்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் மத்திய ரிசர்வ் காவல்படையை சேர்ந்த 3 வீரர்களும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.