

எகிப்து நாட்டில் ராணுவம் ஆட்சிக்கு வந்த பின்னர் எகிப்து நாட்டின் ராணுவ வலிமையை அதிகரிக்க தற்போதைய அதிபர் அல் சீஸி தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தற்போது இத்தாலியிடம் இருந்து சுமார் 9.1பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் மிகப்பெரிய அளவில் ஆயுதங்களை வாங்க முடிவு செய்துள்ளது. இதற்கான இருதரப்புபேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்த மெகா ஒப்பந்தம் ஏறத்தாழ இறுதி செய்யப்படும் நிலையில் இருப்பதாகவும் அப்படி இறுதி செய்யப்பட்டால் எகிப்தின் வரலாற்றிலேயே மிகப்பெரிய ஆயுத இறக்குமதி ஒப்பந்தம் ஆக இது இருக்கும்.


இந்த ஒப்பந்தம் இத்தாலிக்கு பொருளாதார ரீதியாகவும் வியாபார ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது, மேலும் இந்த மெகா ஒப்பந்தம் வாயிலாக எகிப்து நாட்டுடனான உறவை இத்தாலி பலப்படுத்தி கொள்ளவும் விரும்புகிறது.
இந்த மெகா ஒப்பந்தத்தில் 24 யூரோஃபைட்டர் டைஃபூன் விமானங்கள், 24 எம்346 ஜெட் பயிற்சி விமானங்கள், 6 ஃப்ரிகேட் கப்பல்கள் (2 பெர்காமினி ரக கப்பல்கள் உட்பட), 20 ஃபலாஜ் ரோந்து படகுகள், 1 ராணுவ செயற்கைகோள் ஆகியவை இதில் அடங்கும்.

ஏற்கனவே எகிப்து ரஃபேல் போர் விமானத்தை இயக்கி வரும் நிலையில் ரஷ்யாவில் இருந்து சுகோய்35 விமானத்தை வாங்குவதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்து இட்டுள்ளது. மேலும் சுகோய்57 ஸ்டெல்த் விமானத்தை வாங்கவும் முயன்று வருகிறது குறிப்பிடத்தக்கது.


எகிப்தின் இந்த நடவடிக்கைகள் மத்திய கிழக்கு பிரதேசத்தில் தனது ராணுவ வலிமையை பன்மடங்கு அதிகரிக்கவும், துருக்கியின் செயல்பாடுகளை லிபியா போன்ற அண்டை நாடுகளில் வராமல் தடுப்பதற்கும், இஸ்ரேல் எனும் சக்திக்கு எதிராகவும் இருக்கலாம்.

