இந்தியாவுக்கு பராக்8 வான் பாதுகாப்பு அமைப்பை வழங்கும் இஸ்ரேல் !!

  • Tamil Defense
  • June 30, 2020
  • Comments Off on இந்தியாவுக்கு பராக்8 வான் பாதுகாப்பு அமைப்பை வழங்கும் இஸ்ரேல் !!

இஸ்ரேலிய ராணுவம் பயன்படுத்தி வரும் பராக்8 வான் பாதுகாப்பு அமைப்பை அவசர கால தேவையை முன்னிட்டு சிறிது காலம் பயன்படுத்தி கொள்ள இந்தியாவுக்கு இஸ்ரேல் அளிக்க முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே லடாக்கில் இஸ்ரேலிய குறுந்தூர ஸ்பைடர் வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் இந்திய தயாரிப்பான ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பு ஆகியவற்றை இந்தியா நிறுத்தி உள்ளது.

இந்த நிலையில் இடைத்தூர பராக்8 வான் பாதுகாப்பு அமைப்பை இஸ்ரேலிடமிருந்து பெற்று லடாக்கில் நிறுத்துவதன் மூலமாக வான் பாதுகாப்பு திறனை பன்மடங்கு அதிகப்படுத்த இந்தியா திட்டமிட்டு உள்ளது.

இந்த பராக்8 20கிலோ வெடிபொருளை சுமந்து சென்று தாக்கி அழிக்கவோ அல்லது கடுமையான சேதத்தை ஏற்படுத்தவோ வல்லது. இதில் 70கிமீ மற்றும் 150கிமீ செல்லும் இருவகையான ஏவுகணைகள் உள்ளன.

தற்போது இத்தகைய அமைப்பில் எத்தனை நமக்கு கிடைக்க உள்ளது என்பது தெரிவிக்கப்படவில்லை ஆனால் நிச்சயமாக இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளிலேயே அதிக திறன் கொண்டதாக இது விளங்கும்.