1 min read
இந்திய தூதரக அதிகாரியின் வாகனத்தை பாகிஸ்தானில் விரட்டிய ஐ.எஸ்.ஐ !!
பாகிஸ்தான் தலைநகரில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தில் இந்திய தூதருக்கு அடுத்தபடியான பொறுப்பில் இருப்பவர் கவ்ரவ் அலுவாலியா.
இவருடைய வீட்டுக்கு வெளியே ஐ.எஸ்.ஐ பல உளவாளிகளை பல வாகனங்களில் நிறுத்தியுள்ளது. அப்படி சமீபத்தில் அவர் வெளியே வருகையில் இருசக்கர வாகனத்தில் ஒரு ஐ.எஸ்.ஐ நபர் பின்தொடர்ந்து விரட்டியுள்ளார்.
இதனை தொடர்ந்து இந்திய அரசு பாகிஸ்தான் அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மேலும் இத்தகைய சம்பவங்கள் புதிதில்ல, இந்திய தூதரகத்தில் பணியாற்றும் கடற்படை ஆலோசகர், முதன்மை செயலாளர் ஆகியோரின் வாகனங்களையும் இப்படி விரட்டி உள்ளனர்.
மார்ச் மாதத்தில் மட்டுமே இத்தகைய 13 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.