பயங்கரவாத முகாம் தாக்கி அழிப்பு; ஊடுருவல் முயற்சி தடுப்பு !!

  • Tamil Defense
  • June 2, 2020
  • Comments Off on பயங்கரவாத முகாம் தாக்கி அழிப்பு; ஊடுருவல் முயற்சி தடுப்பு !!

இந்திய ராணுவம் இரண்டு ஊடுருவல் முயற்சிகளை வெற்றிகரமாக தடுத்துள்ளது.

முதலாவது நிகழ்வு மேந்தார் செக்டாரில் நடைபெற்றுள்ளது, அந்த பகுதியில் ஒரு பயங்கரவாத முகாமில் 10க்கும் அதிகமான பயங்கரவாதிகள் ஊடுருவ தயாராக இருந்த நிலையில் அவர்களுக்கு உதவ பாக் ராணுவம் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது.

அப்போது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் பயங்கரவாத முகாம் அழிக்கப்பட்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். பாக் ராணுவம் உடனடியாக கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் உடல்களை இடமாற்றம் செய்ததையும் இந்திய ராணுவம் உறுதிப்படுத்தி உள்ளது.

மற்றொரு நிகழ்வில் நவ்ஷெரா செக்டாரில் உள்ள கலால் பகுதியில் மூன்று பயங்கரவாதிகளை அர்ஸால் நல்லா வழியாக இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றுள்ளனர். இதனை கண்ட இந்திய ராணுவ ரோந்து குழுவினர் உடனடியாக செயலில் இறங்க நடைபெற்ற சண்டையில் மூன்று பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகளின் உடல்களும் அங்கேயே கிடப்பதாகவும் பாக் தரப்பில் இருந்து யாரும் உடல்களை இன்னும் அப்புறப்படுத்த வரவில்லை என்றும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.