சீனாவுக்கு எதிரான நடவடிக்கையில் இந்தோனேசியா !!

  • Tamil Defense
  • June 1, 2020
  • Comments Off on சீனாவுக்கு எதிரான நடவடிக்கையில் இந்தோனேசியா !!

சீனா தென்சீன கடல் பகுதியில் பல நாடுகளுக்கு உரிய கடல்பகுதியையும் சட்டத்திற்கு புறம்பாக உரிமை கோரி வருகிறது.

இதன் காரணமாக ஃபிலப்பைன்ஸ் அரசு கடந்த 2016ஆம் ஆண்டு நிரந்தர நடுவர் நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் சீனா செய்வது சர்வதேச விதிகளுக்கு புறம்பானது என தீர்ப்பளிக்கப்பட்டது.

தற்போது இந்தோனேசிய அரசு இந்த தீர்ப்பை மேற்கோள் காட்டி ஆசியான் நாட்டு அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில் சர்வதேச விதிகளுக்கு புறம்பான சீன நடவடிக்கைகளை அடக்க நாம் இணைந்து பணியாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.