எஸ்400 டெலிவரியை துரிதப்படுத்த ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கவுள்ள இந்தியா !!

  • Tamil Defense
  • June 22, 2020
  • Comments Off on எஸ்400 டெலிவரியை துரிதப்படுத்த ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கவுள்ள இந்தியா !!

இன்று மூன்று நாள் சுற்றுப்பயணமாக ரஷ்யா செல்லவுள்ள ராஜ்நாத் சிங் இந்தியாவுக்கான எஸ்400 டெலிவரியை துரிதப்படுத்த அழுத்தம் கொடுகாகவுள்ளார்.

கொரோனா காரணமாக 5.4பில்லியன் டாலர்கள் மதிப்பிலான இந்த கொள்முதல் தாமதமான நிலையில் தற்போது இந்தியாவுக்கு உள்ள பாதுகாப்பு சவால்கள் காரணமாக இந்த டெலிவரியை எவ்வளவு துரிதப்படுத்த முடியுமோ அவ்வளவு துரிதப்படுத்த இந்தியா ரஷ்யாவிடம் அழுத்தம் கொடுக்க உள்ளது. இதற்கான தொகையில் பெருமளவை இந்தியா ஏற்கனவே செலுத்தி விட்டது குறிப்பிடத்தக்கது.

இதைத்தவிர போர் தளவாடங்களுக்கான உதிரி பாகங்களின் சப்ளைகளையும் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்ய அரசிடம் கோரிகாகை வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

சீனாவுடனான எல்லை பிரச்சினையை அடுத்து இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் வெற்றி தின விழா அணிவகுப்பில் இந்தியா முதலில் கலந்து கொள்வது சந்தேகமாக இருந்த நிலையில், இந்திய சீன பிரச்சினைக்கு பின்னர் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இதில் கலந்து கொள்வது என முடிவெடுக்கப்பட்டது.

ரஷ்யாவில் அவர் ரஷ்ய துணை பிரதமர்யூரி போரிஸோவ் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் செர்கேய் ஷோய்கு ஆகியோரை சந்தித்து பேச உள்ளார். அதை போல சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங்கே இந்த விழாவில் கலந்து கொள்வார் என்பதும் குறிப்பிடத்தக்கது.