தவ்லத் பெக் ஒல்டி செக்டாரில் இந்திய ரோந்து குழுவினரை தடுத்த சீன ராணுவம் !!

  • Tamil Defense
  • June 25, 2020
  • Comments Off on தவ்லத் பெக் ஒல்டி செக்டாரில் இந்திய ரோந்து குழுவினரை தடுத்த சீன ராணுவம் !!

தவ்லத் பெக் ஒல்டி செக்டார் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது அவ்வளவு வியூக முக்கியத்துவம் கொண்ட பகுதி. காரகோரம் கணவாய் இங்கிருந்து மிக அருகே உள்ளது. இங்கு நமது விமானதளம் ஒன்று உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சீனா லடாக்கின் பல பகுதிகளில் தொந்தரவு கொடுத்து வரும் நிலையில் தவ்லத் பெக் ஒல்டி செக்டாரில் நமது ரோந்து குழுவினரை சீன ராணுவம் தடுத்து நிறுத்தியுள்ளது.

இந்த செக்டாரில் பிரச்சினையை ஏற்படுத்தும் நோக்கில் பிபி12 மற்றும் பிபி13 ஆகிய பகுதிகளுக்கு ரோந்து செல்லும் நமது படையினரை தடுத்து நிறுத்தி வருகிறது. மேற்குறிப்பிட்ட பகுதிகள் கல்வான் பள்ளதாக்கு பகுதிக்கு அருகில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

லடாக்கில் (அக்சாய் சின் பகுதியையும் சேர்த்து) உள்ள அக்சாய் தீபகற்ப பகுதியின் சிறு பகுதி இந்த தவ்லத் பெக் ஒல்டி செக்டாரில் உள்ளது குறிப்பிடத்தக்கது.