
டெல்லியில் உள்ள பாக் தூதரகத்தில் பணிபுரியும் பாக் அதிகாரிகளின் எண்ணிக்கையை பாதியாக குறைத்து அவர்கள் வெளியேற இந்தியா உத்தரவு பிறப்பித்துள்ளது.இதே போல பாக்கில் உள்ள இந்தியா தூதரகத்தில் உள்ள தனது அதிகாரிகள் பாதிபேர் நாடு திரும்ப கூறியுள்ளது.
ஏழே நாட்களுக்குள் இது செய்து முடிக்கப்பட வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.பொதுவாக ஒரு தூதரகத்தில் 110 அதிகாரிகள் வரை இருப்பர்.அது தற்போது 55ஆக குறைக்கப்பட உள்ளது.
பாக் தூதரக அதிகாரிகள் பல்வேறு சட்டவிரோத செயல்களை செய்வதாக வெளியுறவு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.ஏற்கனவே இரு பாக் அதிகாரிகள் இந்தியாவில் கையும் களவுமாக சிக்கினர்.