
சமீபத்திய கல்வான் பள்ளதாக்கு மோதல் அந்தமானிலும் சீனா கண் வைக்கக்கூடும் என்ற அச்சத்தை கிளப்பி உள்ளது.
இந்திய நிலப்பகுதியில் இருந்து சுமார் 700 நாட்டிகல் மைல்கள் தொலைவில் அமைந்துள்ள அந்தமான நிகோபார் தீவுகள் சிறிது ஆபத்தான இடத்தில் தான் உள்ளன.
இதை ஒட்டிய பகுதிகளில் சீன கடற்படையின் நடமாட்டம் அதிகரித்து கொண்டே வருகிறது. சீன கடற்படையின் நடமாட்டத்தை கண்காணிக்க தொடர்ச்சியான கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.
சீன நீர்முழ்கிகள், கடலடி ஆராய்ச்சி கப்பல்கள் ஆகியவை பல சமயங்களில் இப்பகுதிக்கு அருகே வர முயற்சித்துள்ளன, சில சமயங்களில் கண்டுபிடிக்க பட்டு விரட்டப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.
அந்தமான் தீவுக்கூட்டம் வியூக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இதனை நாம் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். மூத்த கடற்படை அதிகாரிகள் பேசுகையில் அந்தமான் முப்படை கட்டளையகம் முன்னனி போர்க்கப்பல்கள், குறைந்தது 4 பி8ஐ கண்காணிப்பு மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு விமானங்கள் அங்கு நிலைநிறுத்தப்பட வேண்டும் என கூறுகின்றனர்.
இந்திய கடற்படையின் மூத்த நீர்மூழ்கிகள் பிரிவு அதிகாரியும் முன்னாள் அந்தமான் முப்படை கட்டளையக தளபதியுமான வைஸ் அட்மிரல் பி.கே. சாட்டர்ஜி (ஒய்வு) அந்தமானுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அங்கு அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்கிறார்.