இந்திய கடற்படைக்கு நவீன போர்க்கருவி அமைப்பு; நீர்மூழ்கி எதிர்ப்பு போர்முறையில் மற்றோர் மைல்கல் !!

  • Tamil Defense
  • June 27, 2020
  • Comments Off on இந்திய கடற்படைக்கு நவீன போர்க்கருவி அமைப்பு; நீர்மூழ்கி எதிர்ப்பு போர்முறையில் மற்றோர் மைல்கல் !!

இந்திய கடற்படை தனது நீர்மூழ்கி எதிர்ப்பு போர் திறனை மேம்படுத்தும் வகையில் மாரீச் நீரடிகணை எதிர்ப்பு தொழில்நுட்பத்தை வாங்க உள்ளது, இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இந்த மாரீச் அமைப்பு அனைத்து முன்னனி போர்க்கப்பல்களிலும் பொருத்தப்படும். இந்த அமைப்பு எதிரி படைகளால் ஏவப்படும் நீரடிகணைகளை திசைதிருப்பிவிடும் திறன் கொண்டது.

இது முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது, நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு இதில் மிகப்பெரிய பங்காற்றி உள்ளது.

இந்த அமைப்பு ஒரு கடற்படை கலனில் பொருத்தப்பட்டு நன்கு சோதிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்த பின்னரே இதை படையில் இணைக்கும் முடிவு எடுக்கப்பட்டது.

இந்த அமைப்பை தயாரிக்கும் பணியை பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் மேற்கொள்ளும்.

இந்த அமைப்பு இந்திய கடற்படையில் இணைக்கப்படுவதன் மூலமாக உள்நாட்டு தயாரிப்புகளுக்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.