பாகிஸ்தானில் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட இந்திய தூதரக ஊழியர்கள் நாடு திரும்பினர் !!

  • Tamil Defense
  • June 23, 2020
  • Comments Off on பாகிஸ்தானில் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட இந்திய தூதரக ஊழியர்கள் நாடு திரும்பினர் !!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் நகரில் பணியாற்றும் ஐந்து ஊழியர்கள் வாகா எல்லை வழியாக நாடு திரும்பியுள்ளனர்.

அவர்களின் பெயர்களாவன;
1) குருப் கேப்டன் மனுமிதா
2) இரண்டாம் செயலர் ஷிவகுமார்.
3) பங்கஜ்
4) செல்வதாஸ் பால் (CISF DRIVER)
5) த்விமு ப்ரம்மா (CISF DRIVER)
ஆகியோர் ஆவர்.

இவர்களில் செல்வதாஸ் பால் மற்றும் த்விமு ப்ரம்மா ஆகியோரை பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உளவுத்துறையினர் கடத்தி சித்திரவதை செய்துள்ளனர்.

ஜூன் 15 அன்று டிரைவர்களாக பணியாற்றும் இவர்களை இந்திய தூதரகம் அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் இருந்து 5-6 கார்களில் வந்த ஆயுதமேந்திய நபர்கள் முகத்தை மூடிப கைவிலங்கிட்டு கடத்தினர்.

பின்னர் சுமார் 11மணி நேரம் அடையாளம் தெரியாத இடத்தில் வைத்து காரில் செல்லும் போது ஒருவரை மோதிவிட்டு சென்றதாக ஒப்பு கொள்ளும்படியும், இந்திய தூதரகத்தில் அடிக்கடி சில சந்திப்பு நிகழ்வுகளுக்காக பாகிஸ்தானியர்கள் சிலரை தூதரகத்தில் கொண்டு சேர்த்ததாகவும் ஒப்புக்கொள்ளும் படியும் கடுமையாக சித்திரவதை செய்துள்ளனர்.

இரும்பு கம்பிகள், மரத்தடிகளை கொண்டு கடுமையாக அடித்தும், உதைத்தும், கழிவு நீரை குடிக்க செய்தும் இவர்களை சித்திரவதைக்கு உள்ளாகாகி உள்ளனர்.

ஆனால் இவர்கள் அதை ஒப்பு கொள்ளாத காரணத்தால் பின்னர் இரவு விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.