
கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தொழிற்சாலைகள், நிறுவனங்களின் செயல்பாடுகள் முற்றிலும் முடங்கியது.
இதனையடுத்து படிப்படியாக அவை திறக்கப்பட்டாலும் பல்வேறு சிக்கல்கள் நிலவுகின்றன. அந்த வகையில் இந்திய ராணுவத்திற்கு ஆயுதங்களை சப்ளை செய்யும் ஒப்பந்தங்களை பெற்ற பல உள்நாட்டு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சரியான காலநேரத்திற்குள் டெலிவரி செய்ய முடியாமல் தவிக்கின்றன.
இதனை கருத்தில் கொண்டு பாதுகாப்பு அமைச்சகம் கூடுதலாக 4 மாத கால அவகாச நீட்டிப்பு செய்துள்ளது. இது உள்நாட்டு நிறுவனங்களுக்கும் அவற்றில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கும் நிம்மதியை அளித்துள்ளது.