கல்வானில் போரிட்ட வீரர்களை சந்தித்த இராணுவ தளபதி

  • Tamil Defense
  • June 23, 2020
  • Comments Off on கல்வானில் போரிட்ட வீரர்களை சந்தித்த இராணுவ தளபதி

தரைப்படை தளபதி ஜெனரல் நரவாணே அவர்கள் இன்று லடாக் பகுதிக்கு சென்றுள்ளார்.

தரைப்படை தளபதி ஜெனரல் நரவாணே அதிகரித்து வரும் இந்திய சீன எல்லை பதட்டங்களின் போது இந்த லடாக் சுற்றுப்பயணம் செய்துள்ளார்.

அவர் அங்கு பாகிஸ்தான் மற்றும் சீனா உடனான எல்லை கட்டுபாட்டு கோடு பகுதிகளில் தரைப்படையின் தயார்நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

இந்நிலையில் கல்வான் பகுதியில் சீனர்களுக்கு எதிராக போரிட்டு காயமடைந்த வீரர்களை நேரில் சென்று நலம் விசாரித்தார் நமது தளபதி அவர்கள்.

பாங்காங் ஸோ பகுதி கல்வான் பகுதிக்கு அடுத்து மோதல் நடைபெற வாய்ப்புள்ள பகுதியாக அதிகரித்து வருகிறது.

இந்திய ராணுவம் தெம்சாக், ஹாட் ஸ்ப்ரிங்ஸ், ஃபுக்சே, கோயுல், தெம்ஸாங், மர்கோ மற்றும் கல்வான் ஆகிய பகுதிகளில் அதிக படையினரை குவித்துள்ளது.

லடாக்கில் சீனாவுடனான 826கிமீ நீளம் கொண்ட எல்லை கட்டுபாட்டு கோடு பகுதியில் இந்திய தரைப்படை தனது தயார்நிலையை அதிகபடுத்தி உள்ளது.