சீன எல்லைக்கு போபர்ஸ் ஆர்டில்லரிகளை அனுப்பும் இந்தியா

  • Tamil Defense
  • June 4, 2020
  • Comments Off on சீன எல்லைக்கு போபர்ஸ் ஆர்டில்லரிகளை அனுப்பும் இந்தியா

லடாக்கில் இந்திய சீன படைகள் மோதல் விவகாரம் இன்று வரை தொடர்ந்து வருகிறது.இரு நாட்டு படைகளும் படைக்குவிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைகள் ஏதும் பலன் அளிக்காத நிலையில் வரும்
ஜீன் 6 அன்று பெரிய இராணுவ கமாண்டர்கள் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

தற்போது இந்திய இராணுவம் தனது போபர்ஸ் ஆர்டில்லரிகளை சீன எல்லைக்கு நகர்த்தி வருகிறது.இது தொடர்பான கானொளி ஒன்றையும் இந்தியா டுடே செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இது தவிர சாலை மற்றும் பாலம் கட்டுமானங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இதற்கென தொழிலாளர்கள் சிறப்பு ரயில்களில் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

தெற்கு காஷ்மீரில் அவரச விமான ஓடுதளமும் அமைக்கப்பட்டு வருகின்றன.