இந்திய தரைப்படைக்கு 150 புதிய ட்ரோன்கள் வாங்க அனுமதி !!

  • Tamil Defense
  • June 6, 2020
  • Comments Off on இந்திய தரைப்படைக்கு 150 புதிய ட்ரோன்கள் வாங்க அனுமதி !!

இந்திய தரைப்படை நவீனத்துவம் செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது 150 ட்ரோன்கள் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ட்ரோன்கள் தரைப்படையின் காலாட்படை வீரர்களுக்கு வழங்கப்படும் என தெரிகிறது.

1) இந்த ட்ரோன்கள் 6 கிலோ எடைக்கு அதிகமாக இருத்தல் கூடாது,

2) வீரர்கள் எளிதில் சுமந்து செல்லக்கூடிய வகையில் இருத்தல் வேண்டும்.

3) 60 நிமிடங்கள் தொடர்ந்து பறக்கும் திறனையும் சுமார் 5 கிலோமீட்டர் தொலைவு வரை இயங்கக்கூடிய வகையிலும் இருத்தல் வேண்டும்.

என்பது போன்ற நிபந்தனைகள் உள்ளன.