
சீன ராணுவம் தனது படையினருக்கு தற்காப்பு கலை பயிற்சிகளை வழங்குவதற்காக MMA என்று அழைக்கப்படும் கலப்பு தற்காப்பு கலை பயிற்சி வழங்க பல பயிற்சியாளர்களை வரவழைத்துள்ளது.
இவர்களுக்கு பதிலடி கொடுக்க இந்திய தரைப்படை தனது கட்டக் வீரர்களை தயார்படுத்தி வருகிறது.
இந்த கட்டக் வீரர்கள் கல்வான் மோதலின் போது நடத்திய பதிலடி தாக்குதலில் சீன ராணுவம் நிலை குலைந்து போனது குறிப்பிடத்தக்கது.
கட்டக் வீரர்கள் பெல்காமில் உள்ள கமாண்டோ பயிற்சி பள்ளியில் 43 நாட்களுக்கு பயற்றுவிக்கப்படுகின்றனர். அங்கு 35கிலோ எடையுடன் 40கிமீ இடைநில்லாமல் ஒடுதல் உட்பட பல கடினமான பயிற்சிகள் உண்டு.
ஒரு யூனிட்டில் 40-45 கட்டக் வீரர்கள் இருப்பர், இவர்களில் அதிகாரி மற்றும் ஒரு ஜே.சி.ஒ அதிகாரி ஆகியோரும் இருப்பர்.