எல்லையில் பயங்கரவாத ஊடுருவலை முறியடித்த இராணுவம்;மூன்று பயங்கரவாதிகளை வீழ்த்திய இராணுவம்

  • Tamil Defense
  • June 1, 2020
  • Comments Off on எல்லையில் பயங்கரவாத ஊடுருவலை முறியடித்த இராணுவம்;மூன்று பயங்கரவாதிகளை வீழ்த்திய இராணுவம்

காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தின் நௌசேரா செக்டாரில் பயங்கரவாத ஊடுருவலை இந்திய இராணுவம் வெற்றிகரமாக தடுத்துள்ளது.

நௌசேரா செக்டாரின் கலால் ஏரியா பகுதியில் உள்ள அர்சல் நல்லா பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவுவதை இராணுவ வீரர்கள் கண்டுள்ளனர்.

இவர்களை தடுத்து அழிக்க உடனடியாக ஆபரேசன் நடத்தப்பட்டது.ஆபரேசனின் போது பயங்கரவாதிகள் வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட இராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

இந்த பதிலடியில் மூன்று பயங்கரவாதிகள் அங்கேயே வீழ்த்தப்பட்டனர்.பாக் தொடர்ந்து பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் அனுப்ப முயற்சித்து வருகிறது.