
பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் பாக் இராணுவத்தின் பத்து இராணுவ நிலைகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.
ராஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் பாக் நடத்திய தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் கடுமையான பதிலடி கொடுத்துள்ளனர்.
முன்னதாக பாக் நடத்திய தாக்குதலில் இராணுவத்தை சேர்ந்த நாய்க் ஹர்சரண் சிங் வீரமரணம் அடைந்தார்.இதனால் கோபமடைந்த இராணுவ வீரர்கள் பாக்கிற்கு கடுமையான பதிலடியை கொடுத்தனர்.
ககாவ்லியன் நாலி சம்ஹானி செக்டரில் உள்ள பாக் நிலைகளை நமது வீரர்கள் குறிவைத்து தாக்கினர்.இந்த தாக்குதல்களில் பாக் இராணுவத்திற்கு கடும் சேதம் விளைவிக்கப்பட்டது.
சில நாட்களாக இந்திய வீரர்கள் நடத்திய தாக்குதல்களில் 20க்கும் மேற்பட்ட பாக் வீரர்கள் வீழ்த்தப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளிவருகின்றன.பாக் தனது உயிரிழப்புகளை வெளியிடமாட்டோம் என்ற கொள்கையோடு செயல்பட்டு வருவதால் இவைகள் என்றுமே உறுதிப்படுத்தப்படாது.