இந்திய இஸ்ரேல் உறவில் நெருக்கம் அதிகரிப்பு இஸ்ரேலிய தூதர் !!

  • Jecinth Albert
  • June 3, 2020
  • Comments Off on இந்திய இஸ்ரேல் உறவில் நெருக்கம் அதிகரிப்பு இஸ்ரேலிய தூதர் !!

இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் ரோன் மல்கா தி பிரின்டி ஊடகத்தின் ஷேகர் குப்தாவிடம் அளித்த பேட்டியில் கொரோனா தொற்று காலத்தில் இந்திய இஸ்ரேலிய உறவு பலப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹு தொலைபேசி மூலமாக ஆலோசனை மேற்கொண்டதாகவும, கொரோனா வைரஸின் பாதிப்பை கட்டுப்படுத்த இணைந்து செயல்பட உறுதி பூண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் இஸ்ரேலின் உயிரியல் ஆராய்ச்சி கல்லூரி ஆகியவை இணைந்து கொரொனா வைரஸ் ஒழிப்பு மருந்தை கண்டுபிடிக்க முயற்சி செய்து வருவதாகவும் விரைவில் உலகத்திற்கு நல்ல செய்தி கிடைக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் பேசுகையில் இந்தியாவுடன் இணைந்து ஆயுத தொழில்நுட்பங்களை தயாரிக்க இஸ்ரேலியர்கள் விரும்புவதாகவும் இதன் மூலமாக உலகத்தரம் வாய்ந்த ஆயுத தொழில்நுட்பங்களை இந்தியாவிலேயே உருவாக்கி ஏற்றுமதி செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.