
இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் ராணுவங்களும் எல்லைக்கு கனரக தளவாடங்களை நகர்த்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனா டாங்கிகள் பிரங்கிகள் ஆகியவற்றை நகர்த்திய நிலையில் தற்போது இந்திய ராணுவமும் டி72 டாங்கிகள் மற்றும் ஆர்ட்டில்லரி பிரங்கிகளை நகர்த்தி உள்ளது.
நகர்த்தப்பட்ட தளவாடங்கள் களத்தின் பின் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளன, இதன்மூலம் நிலைமை மோசமானால் சீன படைகளை தாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய விமானப்படையும் பாதுகாப்பு நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறது எனவும் தெரிகிறது.