விமானப்படையின் கண்காணிப்பு வளையத்திற்குள் சீனா வான் தளங்கள்

  • Tamil Defense
  • June 28, 2020
  • Comments Off on விமானப்படையின் கண்காணிப்பு வளையத்திற்குள் சீனா வான் தளங்கள்

இந்திய சீன பிரச்சனை பெருகி வரும் நேரத்தில் சீனா தனது திபத் மற்றும் ஷின்சியாங் பகுதிகளில் உள்ள தளங்களில் போர்விமானங்கள்,குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் ஆளில்லா விமானங்களை குவித்து வருகிறது.இவற்றை இந்திய விமானப்படை உன்னிப்பாக கவனித்து இதற்கு பதிலடியாக நமது பகுதியிலும் பலம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்னனி போர்விமானங்களான சுகாய்,மிக்-29 மற்றும் ஜாகுவார் விமானங்கள் 3488கிமீ நீளமுள்ள சீன எல்லையை பாதுகாக்க முன்னனி நிலைகளுக்கு நகர்த்தப்பட்டுள்ளன.

சீன விமானப்படை இந்தியாவை விட நான்கு மடங்கு அதிக விமானப் பலத்தை குவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.முக்கியமாக கிழக்கு லடாக்கை நோக்கியுள்ள சீனத் தளமான ஹோடன் தளத்தில் ஜே-11,ஜே-8 மற்றும் வேறு சில போர்விமானங்கள்,சில அவாக்ஸ் விமானங்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

தவிர கஸ்கார் தளத்தில் ஆறு முதல் எட்டு எச்-6கே குண்டு வீசு விமானங்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.இந்தியாவும் சீனாவுக்கு இணையாக போர்விமானங்களை குவித்துள்ளது.

தவிர மிக விரைவாக ரபேல் விமானங்களையும் பெறும் என நினைக்கிறேன்.