இந்தியாவை என்ன விலை கொடுத்தேனும் பாதுகாக்க விமானப்படை தயார் !!

  • Tamil Defense
  • June 20, 2020
  • Comments Off on இந்தியாவை என்ன விலை கொடுத்தேனும் பாதுகாக்க விமானப்படை தயார் !!

இந்திய திருநாட்டின் பாதுகாப்பை என்ன விலை கொடுத்தும் இந்திய விமானப்படை பாதுகாக்கும் என முன்னாள் விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் பதவ்ரியா இந்திய விமானப்படை அகாடமியில் பயிற்சி நிறைவு செய்த இளம் அதிகாரிகள் இடையே உரையாற்றினார்.
அப்போது இந்தியாவின் எல்லை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்திய விமானப்படை தயாராக உள்ளது, கல்வான் மாவீரர்களின் உயிர்த்தியாகம் வீண்போகாது என நாட்டு மக்களுக்கு உறுதியளித்தார்.

இந்த கருத்தை பல முன்னாள் விமானப்படை அதிகாரிகளும் ஆமோதித்தனர்.

இந்திய விமானப்படையின் முன்னாள் அதிகாரியான ஏர் மார்ஷல் ஆர்.கே. ஷர்மா கூறுகையில் நமது விமானப்படை தளபதி தெளிவான செய்தியை கூறியுள்ளார், நமது விமானப்படை முழு அளவில் எதையும் சந்திக்க தயாராக உள்ளது என்றார்.