இந்திய விமானப்படை தளபதி தீடிர் லடாக் விசிட் எல்லையோரம் தளவாடங்கள் குவிப்பு !!

  • Tamil Defense
  • June 19, 2020
  • Comments Off on இந்திய விமானப்படை தளபதி தீடிர் லடாக் விசிட் எல்லையோரம் தளவாடங்கள் குவிப்பு !!

சமீபத்திய மோதலுக்கு பிறகு இந்திய விமானப்படை, இந்திய தரைப்படைக்கு பக்கபலமாக செயல்பட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் பதவ்ரியா ஶ்ரீநகர் மற்றும் லே விமானப்படை தளங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்திய விமானப்படை தற்போது லே விமானப்படை தளத்தில் தனது அபாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்கள், சினூக் கனரக போக்குவரத்து ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை நிலைநிறுத்தி உள்ளது.

இதைத்தவிர இந்திய விமானப்படை தனது சுகோய்30, ஜாகுவார் மற்றும் மிராஜ்2000 ஆகிய போர் விமானங்களை எல்லையோரம் உள்ள படைத்தளங்களுக்கு நகர்த்தி உள்ளது.

மேலும் இந்திய விமானப்படை சீன ராணுவ நகர்வுகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.