சீனாவின் எஸ்400, எஸ்300 ஆகியவற்றை சமாளிக்க இந்திய விமானப்படை திட்டம் !!

  • Tamil Defense
  • June 30, 2020
  • Comments Off on சீனாவின் எஸ்400, எஸ்300 ஆகியவற்றை சமாளிக்க இந்திய விமானப்படை திட்டம் !!

இந்திய விமானப்படை சீனாவுடன் போர் ஏற்பட்டால் சீனாவின் எஸ்400, எஸ்300 ஆகியவற்றை சமாளிக்க ஒத்திகைகளை மேற்கொண்டு உள்ளது.

இதுபற்றி மூத்த விமானப்படை அதிகாரி ஒருவர் பேசுகையில் சீன ராணுவத்தின் எஸ்400, எஸ்300, எல்.ஒய்80 உட்பட பல வான் பாதுகாப்பு அமைப்புகளை சமாளிக்க இந்திய விமானப்படை ஒத்திகை மேற்கொண்டதாக தெரிவித்தார்.

இதற்கு லடாக், திபெத் ஆகிய பகுதிளின் அதிக உயரம் இந்திய விமானப்படைக்கு கைக்கொடுக்கும் என கூறப்படுகிறது ஆனால் அதே நேரத்தில் இந்த அமைப்புகளை குறைத்து மதிப்பீடு செய்யவும் கூடாது.