இந்த இக்லா ஏவுகணைகளானது (Surface to Air Missile) தரையிலிருந்து வான் இலக்கை தாக்கி அழிக்கும் வகையிலானவை ஆகும்.
லடாக் போன்ற உயர்ந்த பிரதேசங்களில் ஹெலிகாப்டர்கள், தாழ பறக்கும் விமானங்கள், ட்ரோன்கள் ஆகியவற்றை வீழ்த்த பேருதவியாக இருக்கும்.
தற்போது சீனாவுடன் பிரச்சினை நிலவி வரும் நிலையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் ஷெர்கேய் ஷோகுவிடம் இக்லா ஏவுகணை சப்ளையை துரிதப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளார்.
பல்வேறு தளவாடங்களுக்கான சப்ளையை துரிதப்படுத்த வைக்கபட்ட கோரிக்கைக்கு ரஷ்ய ஒப்புதல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அவசரகால திட்டத்தின் கீழ் சுமார் 66 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான தளவாடங்களை வாங்க முப்படைகளுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.