அந்தமானை பன்னாட்டு கடற்படைகளுக்கு திறந்து விட வேண்டும்- மூத்த வல்லுநர்
மூத்த இராணுவ வல்லுநரான சுஜன் சினோய் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் சீன கடற்படை இந்திய பெருங்கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்தாமல் இருக்கும் வகையிலும் அதற்கு சவால் விடுக்கும் வகையிலும் அந்தமான் தீவுகளை பல உலக நாடுகளுக்கு திறந்து விட வேண்டும் என்கிறார்.
ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா மற்றும் சீனா இடையே ஏற்பட்டு இருக்கும் மிக மோசமான எல்லை பிரச்சினையை மேற்கோள் காட்டி கடலில் நாம் சீனாவை குறைத்து மதிப்பிடுகிறோம் என்று கூறுகிறார்.
அந்தமான் நிக்கோபார் கட்டளையகம் சீனாவுக்கு எதிராக பிரதானமாக செயல்பட்டு வரும் நிலையில் அமெரிக்கா ஜப்பான் ஃபிரான்ஸ் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் கடற்படைகள் அந்தாமானை பயன்படுத்தி கொள்ள சுதந்திரம் அளிக்க வேண்டும் என்று வாதிடுகிறார்.
என்ன தான் சீனாவுக்கு எதிராக அணி திரண்டாலும் இந்தியாவின் ஒரு பகுதியை அந்நிய நாட்டு கடற்படைகள் சுதந்திரமாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது அதிலும் அமெரிக்காவை நம்பவே முடியாது தீடிரென நாளைய தினமே நமது எதிரி ஆகலாம்.
ஆகவே தேச நலன் கருதி இதற்கு எதிர்ப்பை பதிவு செய்கிறோம்.