
வரலாற்றில் முதல் முறையாக இரஷ்யாவின் வெற்றி தின கொண்டாட்டங்களில் பங்கேற்க முப்படைகளை இந்தியா அனுப்புகிறது.வரும் ஜீன் 24 அன்று முப்படைகளும் மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில் அணிவகுப்பு நடத்தும்.
கடந்த 2015ல் இந்திய ராணுவம் மட்டுமே இரஷ்யாவின் வெற்றிதின கொண்டாட்டத்தில் பங்கேற்று செஞ்சதுக்கத்தில் அணிவகுத்து சென்றது.
1945 இரண்டாம் உலகப் போரின் போது நாசிக்கள் சரணடைந்ததை நினைவு கூறும் பொருட்டு வருடந்தோறும் மே9 வெற்றி தினமாக இரஷ்யா கொண்டாடி வருகிறது.கொரானா காரணமாக இந்த வருட அணிவகுப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்தது.
இந்த வருடத்திற்கான சிறப்பு விருந்தினராக பிரதமர் அழைக்கப்பட்டிருந்தாலும் அவர் விருந்தினராக பங்கேற்கமாட்டார்.அதற்கு பதிலாக இந்தியாவின் முப்படைகளும் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.