
இரு நாட்டு படைகளும் எல்லையில் படைக்குவிப்பில் ஈடுபட்டு வரும் வேளையில் இந்திய விமானப்படையின் அதிஎடை தூக்கும் விமானங்கள் உதவியுடன் டேங்க் மற்றும் கவச வாகனங்கள் எல்லை நோக்கி நகர்த்தப்பட்டு வருகின்றன.
விமானப் படையும் தனது காம்பட் ரோந்து பணியை அதிகரித்துள்ளது.அமெரிக்கத் தயாரிப்பு சி-17 மற்றும் இரஷ்ய தயாரிப்பு ஐஎல்-76 விமானங்கள் உதவியுடன் ஹிமாலய பகுதிக்கு டேங்குகள் சண்டிகர் மற்றும் மற்ற பகுதிகளில் இருந்து கவச வாகனங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்தியா ஏற்கனவே மூன்று ஆர்மர் ரெஜிமென்டுகளை லடாக்கில் நிலைநிறுத்தியுள்ளது.
மலைப்பாங்கான பகுதிகளில் கவச வாகனங்கள் கொண்டு போரிடுவது மிக கடினமான விசயம் ஆகும்.
1962க்கு பிறகு அவசரம் காரணமாக டேங்குகள் முன்னனி சீன எல்லைக்கு அனுப்பப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.