
கடந்த 25 நாட்களாக இந்தியா சீனா இடையேயான பதற்றம் அதிகரித்துக் கொண்டே வருகிறது அவ்வப்போது மோதல்களும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அப்படியான பகுதிகளில் நமது இருப்பை பல்ப்படுத்த மேலதிக துருப்புகளை இந்தியா நகர்த்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி வடக்கு கட்டளையகத்தின் பல ரிசர்வ் படையணிகள் மற்றும் இந்தோ திபெத் எல்லை காவல்படையினரும் எல்லையோர பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே கள முன்னனியில் இருக்கும் இந்தோ திபெத் எல்லை காவல்படையின் படையணிகளுடைய வீரர்கள் காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் அவர்கள் எல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.