ஏற்கனவே ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கான தற்காலிக உறுப்பினர் தேர்தல் நடைபெறும் என பதிவிட்டு இருந்தோம். அதில் ஆசியா பஸிஃபிக் பிராந்தியத்தில் இந்தியாவை தவிர போட்டியாளர்கள் களத்தில் இல்லை.
இன்று 1மணி அளவில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது எவ்வித போட்டியும் இன்றி இந்தியா ஆசியா பஸிஃபிக் பிராந்திய இடத்தை பிடித்து கொண்டது.
இந்த இடத்தில் இந்தியா அடுத்த இரண்டு வருடங்கள் அதிகாரத்தில் இருக்கும்.
இந்த பதவிக்கு இந்தியா 8ஆவது முறையாக தேர்வு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.