கல்வான் எங்களுடையது என்ற சீனாவின் கூற்றை மீண்டும் மறுத்த இந்தியா

  • Tamil Defense
  • June 20, 2020
  • Comments Off on கல்வான் எங்களுடையது என்ற சீனாவின் கூற்றை மீண்டும் மறுத்த இந்தியா

கல்வான் பகுதி சீனாவிற்கு சொந்தம் என்ற சீனவின் கூற்றை இந்தியா மீண்டும் மறுத்துள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சகம் சீனாவின் இந்த கூற்றை மறுத்து செய்தி வெளியிட்டுள்ளது.

வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அனுரக் ஸ்ரீவஸ்தவா வெளியிட்ட தகவல்படி ” வரலாறு படி கல்வான் எங்களுடையது ” என்பதற்கான ஆதாரம் உள்ளதாக கூறியுள்ளார்.
கல்வான் எப்போதும் சீனக்கட்டுப்பாட்டில் இல்லை என அவர் கூறியுள்ளார்.

எல்லையில் கட்டுமானம் ஏற்படுத்த சீன வீரர்கள் முயற்சித்ததை தடுத்த போது சீனாவின் செய்கையால் தான் ஜீன் 15 சண்டை நடைபெற்றதாக அவர் கூறியுள்ளார்.

எல்லையில் தற்போதும் சீனா படைக்குவிப்பில் ஈடுபட்டுள்ளது.பங்கோங் ஏரியில் சில நிரந்தர கட்டுமானங்கள் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.