சிறப்பு படைக்கு அவசரமாக அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் கொள்முதல்

  • Tamil Defense
  • June 29, 2020
  • Comments Off on சிறப்பு படைக்கு அவசரமாக அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் கொள்முதல்

அமெரிக்காவின் FN Herstal நிறுவனத்திடம் இருந்து இந்திய இராணுவத்தின் சிறப்பு படைகளுக்கு அவசர நிலையில் சிறிய ரக ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.

பெல்ஜிய நிறுவனமான FN Herstal-ன் அமெரிக்க பிரிவில் இருந்து 7.62 x 51 mm FN Scar துப்பாக்கிகள் வாங்கப்பட உள்ளன.இராணுவத்திற்கு வழங்கப்பட்ட அவரச பவரை பயன்படுத்தி 200-300 கோடிகள் செலவில் இந்த கொள்முதல் பணிகள் நடைபெறுகிறது.

வடகிழக்கு மற்றும் மியான்மர் பகுதிகளில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் சிறப்பு படை வீரர்கள் சிறப்பாக செயல்பட இந்த கொள்முதல் நடைபெறுகிறது.ஏற்கனவே படையில் உள்ள OFB தயாரிப்பு 1B இலகுரக இயந்திர துப்பாக்கிகளுக்கு மாற்றாக இந்த புதிய துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட உள்ளது.

715 Mk 48 இலகுரக இயந்திர துப்பாக்கிகள்

1,050 FN Scar (H) 7.62×51 தாக்கும் துப்பாக்கிகள் ,

1,400 FN Scar (L) அல்லது HK-416 தாக்கும் துப்பாக்கிகள்

110 .50 காலிபர் பிரௌனிங் கனரக இயந்திர துப்பாக்கிகள்

400 தலைக்கவசத்தில் பொருத்தப்படும் இரவு நேர பார்க்கும் கருவிகள்

600 பாரசூட்கள்

100 பெரட் M107 A1 ஸ்னைப்பர் துப்பாக்கிகள்

தவிர 20 மில்லியன் ரவுண்டு குண்டுகள் வாங்கப்பட உள்ளன.