
கடந்த 1992ஆம் ஆண்டு முதல் மலபார் போர்ப்பயிற்சி இந்திய மற்றும் அமெரிக்க கடற்படைகள் இடையே தொடங்கப்பட்டது. பல வருட காலமாக இருதரப்பு போர்ப்பயிற்சியாக இருந்த இது கடந்த 2015ஆம் ஆண்டு ஜப்பான் இணைய முத்தரப்பு போர்ப்பயிற்சி ஆனது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவும் இந்த போர்ப்பயிற்சியில் இணைய ஆர்வம் தெரிவித்து வந்த நிலையில் இந்தியா ஆஸ்திரேலியாவை இணைக்க மறுத்து வந்தது, இதற்கு காரணமாக சீனாவுக்கு எதிராக நால்வர் ராணுவ கூட்டனி எனும் பேச்சு உருவாகி விடும் என கூறி வந்தது. உண்மையில் சீனாவை மனதில் வைத்து தான் நடைபெறுகிறது என்பது வேறு விஷயம்..
ஆனால் திடிர் திருப்பமாக தற்போது இந்தியா ஆஸ்திரேலியாவை அடுத்த மலபார் போர்ப்பயிற்சியில் இருந்து இணைத்து கொள்ள விரும்புவதாக தெரிகிறது.
இதுகுறித்து இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் பேரி ஒ ஃபேர்ரல் கூறுகையில் மலபார் போர்ப்பயிற்சிக்கு அழைப்பு விடுப்பது இந்தியா அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கூட்டு முடிவாகும், நிச்சயமாக இதில் பங்கு கொள்வது என்பது எங்களுக்கு மகிழ்ச்சியான விஷயம் தான். எது எப்படியோ கடந்த சில வருடங்களாக இந்திய ஆஸ்திரேலிய நட்புறவு எதிர்பாராத அளவுக்கு பலப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.