இந்தியப் பெருங்கடலில் அதிகரிக்கும் சீன ஆதிக்கம்; ஜப்பானுடன் தளவாட ஒப்பந்தம் மேற்கொள்ள திட்டம்

  • Tamil Defense
  • June 6, 2020
  • Comments Off on இந்தியப் பெருங்கடலில் அதிகரிக்கும் சீன ஆதிக்கம்; ஜப்பானுடன் தளவாட ஒப்பந்தம் மேற்கொள்ள திட்டம்

இந்திய-பசிபிக் கடற்பகுதிகளில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.இதை கட்டுப்படுத்த ஜப்பானுடன் இந்தியா தளவாட பகிர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கு முன் அமெரிக்கா,பிரான்ஸ்,தென் கொரியா,சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா இதே போன்றதொரு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.சீனாவின் பெல்ட் மற்றும் ரோடு இனிசியடிவ் எனப்படும் BRI திட்டத்தை சமாளிக்கவும் இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டவும் இந்த ஒப்பந்தங்கள் உதவும்.

நேற்று முன்தினம் தான் ஆஸ்திரேலியாவுடன் இது போன்ற ஒரு ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டது.இரு நாடுகளும் தொடர்ந்து இராணுவ உறவை ஆழப்படுத்தி வருகின்றன.

இந்த ஒப்பந்தம் மூலம் இந்திய போர்க்கப்பல்கள் ஆஸ்திரேலிய டேங்கர் கப்பல்களிடம் இருந்து ஆழ்கடலிலும் எரிபொருள் நிரப்பிக்கொள்ள முடியும்.ஆஸ்திரேலிய தளங்களை பயன்படுத்தி கொள்ளவும் முடியும்.இதே போல் ஆஸ்திரேலியாவும் இந்திய தளங்களை பயன்படுத்த முடியும்.

கடந்த 2016ல் இந்தியா இதே போல logistics exchange memorandum of agreement (LEMOA) எனப்படும் ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் ஏற்படுத்தியது.இதன் மூலம் டிஜிபௌட்டி,குவாம் டியாகோ கார்சியா மற்றும் சுபிக் பே-ல் உள்ள அமெரிக்கத் தளங்களை இந்தியா பயன்படுத்திக்கொள்ள முடியும்.