இந்தோ பஸிஃபிக் பிராந்தியத்தில் அதிகரிக்கும் இந்தியாவின் செல்வாக்கு; இந்திய-ஃபிலிப்பைன்ஸ் நட்பு !!

  • Tamil Defense
  • June 14, 2020
  • Comments Off on இந்தோ பஸிஃபிக் பிராந்தியத்தில் அதிகரிக்கும் இந்தியாவின் செல்வாக்கு; இந்திய-ஃபிலிப்பைன்ஸ் நட்பு !!

சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஃபிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுவடர்டெ அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது இரு தலைவர்களும் கொரோனா ஒழிப்பு மற்றும் பாதுகாப்பு துறை சார்ந்த உறவுகள் பற்றி விவாதித்து கொண்டுள்ளனர்.

அப்போது இந்தோ பஸிஃபிக் பிராந்தியத்தில் இந்தியா தனது பங்களிப்பை அதிகபடுத்த வேண்டும் என ஃபிலிப்பைன்ஸ் அதிபர் கேட்டு கொண்டதாக தெரிகிறது.

இந்தியா மற்றும் ஃபிலிப்பைன்ஸ் இடையே கடந்த சில வருடங்களாக பாதுகாப்பு துறை சாரந்த நெருக்கம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதாவது இந்திய ராணுவ அதிகாரிகள் ஃபிலிப்பைன்ஸ் செல்வதும் , ஃபிலிப்பைன்ஸ் ராணுவ அதிகாரிகள் இந்தியா வருவதும் பாதுகாப்பு கண்காட்சிகளில் பங்கேற்பதும், ஆயுத கொள்முதல் குறித்து பேசுவதும் அதிகரித்து கொண்டே வருகிறது.