இந்தியாவில் உள்ள பாக் தூதரகத்தில் பணியாளர்களை 50% ஆக குறைக்க மத்திய அரசு நடவடிக்கை !!

  • Tamil Defense
  • June 25, 2020
  • Comments Off on இந்தியாவில் உள்ள பாக் தூதரகத்தில் பணியாளர்களை 50% ஆக குறைக்க மத்திய அரசு நடவடிக்கை !!

தலைநகர் தில்லியில் அமைந்துள்ளது பாகிஸ்தானிய தூதரகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களின் எண்ணிக்கையை 50%ஆக குறைக்கும்படி மத்திய அரசு பாகிஸ்தானை கேட்டு கொண்டுள்ளது. 50% மேல் பாக் ஊழியர்கள் இந்தியாவில் பணியாற்ற அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை 50% ஆக குறைக்க உள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தானிய தூதரக மூத்த அதிகாரியை இந்திய வெளியுறவு அமைச்சக அலுவலகத்திற்கு வரவழைத்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தூதரக ஊழியர்கள் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டதும் பின்னர் அவர்கள் நாட்டிற்கு திரும்ப அனுப்பி வைக்கப்பட்டது போன்ற நிகழ்வுகள் மற்றும்,

மேற்குறிப்பிட்ட நிகழ்விற்கு பழிவாங்கும் விதமாக இந்திய தூதரக ஊழியர்கள் இருவர் பாகிஸ்தானில் கடத்தப்பட்டு போலி புகாரை ஒப்புக்கொள்ள 12மணிநேரம் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டது போன்ற நிகழ்வுகள் மத்திய அரசை இத்தகைய நடவடிக்கை எடுக்க தூண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

சரியாக ஜூன்30ஆம் தேதி இந்த நடவடிக்கை இந்தியா சார்பில் அமல்படுத்தப்படும் அன்றைய தினமே பாகிஸ்தானும் இதனை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது.