இந்தியா இனி பலவீனமாக இல்லை, பெருமைக்கு சமரசம் கிடையாது: பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

  • Tamil Defense
  • June 15, 2020
  • Comments Off on இந்தியா இனி பலவீனமாக இல்லை, பெருமைக்கு சமரசம் கிடையாது: பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

எல்லையில் நடைபெற்று வரும் பிரச்சனையை இரு நாடுகளும் பேசி தீர்த்து முடிவெடுக்கும் என அமைச்சர் இராஜ்நாத் கூறியுள்ளார்.எனினும் இந்தியா நாட்டின் பெருமைக்கு சமரசம் செய்யும் எந்த முயற்சியும் எடுக்காது எனவும் இந்தியா பலவீனமான நாடு அல்ல எனவும் கூறியுள்ளார்.

இரு நாடுகளும் டிப்ளோமேட்டிக் மற்றும் இராணுவ முறைகளில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை முடிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நம்பிக்கையுடன் நான் கூற முடிந்த ஒரே விசயம் இந்தியா தனது பெருமையை சமரசம் செய்யாது என்பது மட்டுமே என அவர் கூறியுள்ளார்.

இதற்கு முன் எல்லைப் பிரச்சனை கட்டுக்குள் உள்ளதாகவும் பகுதி பகுதியாக இரு நாடுகளும் துருப்புகளை விலக்கி கொள்ளும் என தளபதி நரவனே அவர்கள் கூறியிருந்தார்.

கடந்த வெள்ளியன்று ஐந்தாம் முறையாக பிரச்சனை தொடர்பாக இரு நாட்டு இராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர்.எல்லை முழுதும் தற்போது சீனா படைக்குவிப்பில் ஈடுபட்டுள்ளது.