இந்தியாவுடனான இணைப்பை களைய முயற்சிக்கும் நேபாளம் !!

  • Tamil Defense
  • June 27, 2020
  • Comments Off on இந்தியாவுடனான இணைப்பை களைய முயற்சிக்கும் நேபாளம் !!

நேபாளம் இந்தியாவுடனான இணைப்பை களைய முயற்சிக்கும் நோக்கில் புதிய சாலை ஒன்றை கட்டமைத்து வருகிறது.

நேபாள நாட்டின் தார்சூலா மாவட்டத்தில் தார்சூலா-தின்கார் சாலை இணைப்பை கட்டமைத்து வருகிறது. தற்போது இந்த பணிகளை விரைவுபடுத்தும் நோக்கில் நேபாள ராணுவம் வரவழைக்கப்பட்டு உள்ளது.

87கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த சாலையின் 450மீ நீளம் கொண்ட பகுதி சிக்கலானது. இந்த பகுதியில் கட்டுமான பணியை மேற்கொள்ள தான் நேபாள ராணுவம் வரவழைக்கபட்டுள்ளது.

இந்த சாலை தின்கார் அருகே உள்ள சீன எல்லை வரை செல்லும் என தெரிகிறது. அதே நேரத்தில் இந்தியாவுடனான சாலை தேவை இனி இருக்காது ஆகவே நேபாளம் சீனாவை நெருங்கி செல்கிறது என்பது தெளிவாகிறது.