மூன்று நாள் பயணமாக இரஷ்யா சென்றுள்ள இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் இரஷ்யாவிடம் அவசர தேவையாக டேங்க்,போர்விமானங்கள் மற்றும் நீர்மூழ்கி உதிரி பாகங்கள் வழங்க கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லடாக்கில் இந்திய சீன பிரச்சனை பெரிதாகி வரும் நேரத்தில் வான் வழியாக உடனடியாக இந்த பாகங்கள் இந்தியா அனுப்பப்பட வேண்டும் எனவும் தேவையெனும் போது இவற்றை இந்தியா உபயோகிக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனும் இந்த நேரத்தில் இந்தியா தனது படைப் பிரிவுகளையும் இயந்திர தளவாடங்களையும் தயார் படுத்தி வருகிறது.இந்தியா போரை விரும்பவில்லை அமைதியை தான் விரும்புகிறது என கூறி வந்தாலும் எந்நிலையும் சமாளிக்க தயாராகவே உள்ளோம் எனவும் அறிவித்துள்ளது.
விமானப்படையின் முதுகெலும்பாக உள்ள சுகாய் விமானத்திற்கும் ,கவச வாகனப்படையின் முதுகெலும்பாக திகழும் டி-90 முன்னனி போர் டேங்கிற்கும் உதிரி பாகங்கள் பெறப்படுகின்றன.கடல் வழியாக இதற்கு முன் பாகங்கள் பெறப்பட்டன.தற்போது அவற்றை விமானம் வழியாக சப்ளை செய்ய கேட்கப்பட உள்ளது.
ஜீன் 24 இரஷ்ய வெற்றி தின கொண்டாட்டத்தில் பங்கேற்க இந்தியா முப்படைகளை அனுப்பியுள்ளது.
இது தவிர எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை குறித்த நேரத்திற்கு முன்னதாகவே டெலிவரி செய்ய கேட்டுள்ளது.