கடலில் சீனாவுக்கு எதிரான கண்காணிப்பை வலுப்படுத்தும் இந்திய கடற்படை !!

சமீபத்தில் நடைபெற்ற கல்வான் மோதலுக்கு பிறகு இந்திய கடற்படை தனது பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.

தற்போது எல்லையில் பிரச்சினை நிலவி வரும் நிலையில் இந்திய கடற்படை அமெரிக்கா ஆஸ்திரேலியா ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படைகளுடனான ஒத்துழைப்பை அதிகபடுத்தி வருகிறது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் சீன கடற்படை கப்பல்கள் அதிகம் பயணிக்கும் கடல்பகுதியில் இந்திய கடற்படை மற்றும் ஜப்பானிய கடற்படை ஆகியவை இணைந்து பயிற்சி மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது நிலைமை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் சூழலில் இந்திய கடற்படை இந்திய பெருங்கடல் பகுதியில் சீன கடற்படை நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பை வலுப்படுத்தி உள்ளது.