கல்வான் பகுதிக்கு டி-90 டேங்குகளை நகர்த்தும் இந்திய இராணுவம்

  • Tamil Defense
  • June 30, 2020
  • Comments Off on கல்வான் பகுதிக்கு டி-90 டேங்குகளை நகர்த்தும் இந்திய இராணுவம்

ஒருபுறம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தாலும் வரப்போகும் கடினமான சூழ்நிலையை சமாளிக்க ஆறு டி-90 டேங்குகளை கல்வான் பகுதிக்கு இந்திய இராணுவம் நகர்த்தியுள்ளது.தோள்களில் தாங்கி ஏவக்கூடிய டேங்க் எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகளையும் எல்லைப் பகுதிக்கு நகர்த்தியுள்ளது இந்திய இராணுவம்.

சீன இராணுவம் தொடர்ந்து எல்லைக்கு ஆயுதங்களை அனுப்பி வருவதால் இந்திய இராணுவமும் தனது பீஷ்மா டேங்குகளை எல்லைக்கு அனுப்பியுள்ளது.

155மிமீ ஹௌவிட்சர்களுடன் இன்பான்ட்ரி காம்பட் வாகனங்களும் 1597கிமீ நீளமுள்ள கிழக்கு லடாக் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.ஏற்கனவே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் படைகளை விலக்கி கொள்வது என முடிவெடுக்கப்பட்டாலும் இந்திய இராணுவம் ஒரு இன்ச் கூட எதிரிபடைகளுக்கு விடக்கூடாது என்ற எண்ணத்துடன் படைக்குவிப்பில் ஈடுபட்டு வருகிறது.

சீன வீரர்களை போல அல்லாது இந்திய வீரர்கள் கடினமானவர்கள்.அனைத்து காலநிலைகளிலும் போரிட கூடியவர்கள்.தேசப்பற்றாளர்கள்.
15,000அடி உயரத்தில் செயல்பட கூடியவர்கள்.மலைப் பகுதி மட்டுமல்ல அதனுடன் பனிசூழ் மலைகளிலும் போரிட பயிற்சி பெற்றவர்கள்.அனுபவசாலிகள்.திறமையானவர்கள்.மறுபுறம் சீனப்படைகள் அப்படி இல்லை.அவர்கள் எவ்வளவு போர் தந்திரம் தெரிந்தாலும் களத்தில் செயல்படுத்தியதில்லை.களம் என்பது வேறு.அது வேறு அனுபவம்.நான்கு போர்களில் பெற்ற அனுபவச் செல்வம் இந்திய இராணுவத்திடம் உள்ளது.திறமையான கமாண்டர்கள் உள்ளன.

மறுபுறம் இந்திய கடற்படையும் விமானப்படையும் அதிக பட்ச உசார் நிலையில் தயாராக வைக்கப்பட்டுள்ளனர்.