எல்லையோரம் ஏவுகணைகள் நகர்வு !!

இந்திய சீன எல்லை பிரச்சினை நாளுக்கு நாள் மோசமான நிலையை நோக்கி செல்லும் நேரத்தில் தற்போது இந்திய ராணுவம் ஏவுகணைகளை எல்லையோரம் நகர்த்தி உள்ளது.

உடனடி எதிர்வினை வான் பாதுகாப்பு ஏவுகணைகளை சீன ராணுவத்தின் வான்வழி அத்துமீறல்களை தடுக்கும் வகையில் இந்திய ராணுவம் நகர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.

சீன ராணுவ வானூர்திகளின் நடமாட்டம் எல்லையோரம் அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.