வான் பாதுகாப்பு அமைப்புகளை கிழக்கு லடாக் நோக்கி நகர்த்தும் இராணுவம்
எல்லையில் சீன விமானங்கள் மற்றும் வானூர்திகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதை அடுத்து இந்தியா தனது அதிநவீன வான் பாதுகாப்பு ஏவுகணை கிழக்கு லடாக் நோக்கி நகர்த்தியுள்ளது.
இந்திய எல்லைக்கு 10கிமீ தொலைவில் சீனாவின் சுகாய்-30 மற்றும் குண்டுவீச்சு விமானங்கள் தொடர்ந்து பறப்பது கண்டறியப்பட்டுள்ளது.மேலும் இந்தியா ஒரு நட்பு நாட்டிடம் இருந்து அதிக திறனுள்ள வான் பாதுகாப்பு அமைப்பை பெற்று எல்லையில் நிலைநிறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தௌலத் பெக் ஓல்டி,கல்வான் ,பிபி14-17, ஹாட் ஸ்பிரிஙம பகுதிகள்,பங்கோங் மற்றும் பிங்கர் பகுதிகள் என அனைத்து செக்டார்களுக்கு அருகிலும் சீன வானூர்திகள் பறந்து வருகின்றன.இதற்காக இந்தியா ஆகாஸ் வான் பாதுகாப்பு அமைப்பை எல்லை நோக்கி நகர்த்தியுள்ளது.இது போர்விமானம் மற்றும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தக்கூடியது.
இந்திய போர்விமானங்களும் முழுமையாக ஆயுதம் தரித்து அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.