சிக்கீமில் சீனா புதிய பிரச்சினையை கிளப்பலாம் – பாதுகாப்பு வல்லுநர்கள் ஐயம் !!

  • Tamil Defense
  • June 11, 2020
  • Comments Off on சிக்கீமில் சீனா புதிய பிரச்சினையை கிளப்பலாம் – பாதுகாப்பு வல்லுநர்கள் ஐயம் !!

கடந்த மே9 ஆம் தேதி சிக்கீம் மாநிலத்தில் உள்ள நாகுலா பகுதியில் சீன படையினர் அத்துமீறியதில் இந்திய மற்றும் சீன படையினர் மோதிக்கொண்டனர். இது குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களையும் அப்போது பதிவிட்டு இருந்தோம்.

தற்போது இப்பிரச்சினை குறித்து ஆய்ந்த சில பாதுகாப்பு வல்லுநர்கள் இந்தியா மற்றும் சீனா இடையை பிரச்சினை இல்லாத சிக்கீமில் ஏன் சீன படையினர் மோதலில் ஈடுபட வேண்டும் எனும் கேள்விக்கு ஒரு விளக்கத்தை முன்வைக்கின்றனர்.

கடந்த 2003ஆம் ஆண்டு சீன பிரதமர் வென் ஜியாபாவோ மற்றும் இந்திய பிரதமர் வாஜ்பாய் ஆகியோர் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இருதரப்பிலும் வரைபடங்கள் பறிமாற்றம் செய்து கொள்ளப்பட்டன.
அப்போது சிக்கீமை இந்தியாவின் ஒரு பகுதியாக சீனா ஏற்றுக்கொண்டது.

ஆனால் தற்போது இங்கு நாகுலா பகுதியில் பிரச்சினை நடந்திருப்பது சில சந்தேகங்களை உருவாக்கி உள்ளது.
அதாவது இப்பகுதியையும் சீனா உரிமை கோரி பிரச்சினையில் ஈடுபடலாம்.

ஆனால் இந்தியா 1840ஆம் ஆண்டு சிக்கீம் அரசுக்கும் திபெத்திய அரசுக்கும் இடையிலான ஒரு ஒப்பந்தத்தை முன்வைத்து நாகுலா தனக்கு உரியது என நிருபிக்க முடியும்.