
இந்திய தரைப்படையின் தலைமை தளபதியான ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவாணே பிரதமர் மோடியை சமீபத்தில் சந்தித்து லடாக் எல்லை நிலவரம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அப்போது தற்போது லடாக்கில் சீன படைகளுக்கு நிகரான அளவில் இந்திய படைகள் உள்ளதாகவும், ஆகவே சீன படைகள் ஏதேனும் பிரச்சினையில் ஈடுப்பட்டால் தகுந்த பதிலடகயை கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை படைகளுக்கு உள்ளதாக கூறியுள்ளார்.
இந்த சந்திப்பு ஜெனரல் நரவாணே லடாக் சென்று திரும்பிய பின்னர் வியாழக்கிழமை அன்று நடைபெற்றுள்ளது.
அதை போலவே வெள்ளிக்கிழமை அன்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களை ஜெனரல் நரவாணே சந்தித்து உள்ளார் அப்போது ஜெனரல் நரவாணே பாதுகாப்பு நிலவரம், தயார் நிலைகள் குறித்து விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.