
லடாக்கில் கண்காணிப்பை அதிகரிக்கும் இந்தியா
இந்திய இஸ்ரேலிடமிருந்து வாங்கிய ஹெரோன் ஆளில்லா விமானங்களை வைத்து லடாக் எல்லையோரம் கண்காணிப்பை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
மேலும் இந்தோ திபெத் எல்லை காவல்படை மற்றும் மலையக போர்ப்பயிற்சி பெற்ற படையினர் எல்லைக்கு நகர்த்தப்பட்டு உள்ளனர்.
மலையக போர் முறையானது மிகவும் கடினமான போர்முறைகளில் ஒன்றாகும், காரணம் உயரத்தில் இருக்கும் 1 எதிரியை வீழ்த்த சுமார் 10வீரர்களை இழக்க வேண்டியது இருக்கும், இது கார்கில் போரின் போதும் நடைபெற்றது.
உத்தராகண்ட், அருணாச்சல பிரதேசம், சிக்கீம், லடாக் ஆகிய பகுதிகளை சேர்ந்த வீரர்கள் காலம் காலமாக மலையக போர்ப்பயிற்சி பெற்றவர்கள் மேலும் மலைப்பகுதிகளில் வாழ்பவர்கள் ஆகவே இயல்பாகவே அதிக உயரம் கொண்ட மலைப்பகுதிகளில் இவர்களால் போரிட முடியும்.
மேலும் சீனாவின் கிழக்கு கட்டளையக தளபதி ஜெனரல் ஜாவோ ஜாங்கி யின் நடவடிக்கைகளால் பிரதமர் மோடி அதிருப்தியில் உள்ளதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. 1960ஆம் ஆண்டு சீனா உரிமை கோரிய இந்திய பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்யும் நோக்குடன் அவர் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.